முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி, செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

தனது மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி இளைஞர் ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று ஒரு மணி நேரம் மிரட்டல் விடுத்தார். போலீஸார் அவரிடம்

தற்போதைய செய்திகள்

மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி, செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

தனது மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி இளைஞர் ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று ஒரு மணி நேரம் மிரட்டல் விடுத்தார். போலீஸார் அவரிடம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

தனது மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி இளைஞர் ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று ஒரு மணி நேரம் மிரட்டல் விடுத்தார். போலீஸார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை பத்திரமாக கீழே இறக்கி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

சிவகாசி, விஸ்வநத்தம், பூச்சன்காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மகாலிங்கம் (35). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகள் உண்டு. இதில் இரண்டில் தண்டனை பெற்றவர். இரு வழக்கில் விடுதலையானவர். மேலும் இவர் மீது சில திருட்டு வழக்குகள் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகள் முத்துலட்சுமி (30). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மாரிமுத்து (11) என்ற மகன் உண்டு. கருத்துவேறுபாடு காரணமாக முத்துலட்சுமி கணவரை விட்டு பிரிந்துள்ளார்.

இந்நிலையில் மகாலிங்கத்தை முத்துலட்சுமி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஈஸ்வரி, முனீஸ்வரி என்ற இரு குழந்தைகள் உண்டு. மகாலிங்கத்தின் போக்கு பிடிக்காத முத்துலட்சுமி தனது மகனைக் கூட்டிக்கொண்டு கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

தனது மாமியார் மற்றும் இரு பிள்ளைகளுடன் மகாலிங்கம் விஸ்வநத்தம் வீட்டில் குடியிருந்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த மகாலிங்கம், ஆராய்ச்சிபட்டி தெருவில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி மிரட்டினார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் மகேந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்போன் கோபுரத்தின் மீது நின்று கொண்டிருந்த மகாலிங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பின்னர் போலீஸார் சமாதானம் செய்து மகாலிங்கத்தை பத்திரமாக இறக்கி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

திருப்பூரில் உள்ள மனைவி முத்துலட்சுமியை அழைத்து சமாதானம் செய்து மகாலிங்கத்துடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆய்வாளர் மகேந்திரன் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →