திருவாரூர் மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு
காவிரி நதி நீர் விடுவது தொடர்பாக மத்தியக் குழுவினர் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பார்வையிட்டனர். இன்று திருவாரூர் மாவட்டத்தில் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு வருகின்றனர்.
தற்போதைய செய்திகள்திருவாரூர் மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு
காவிரி நதி நீர் விடுவது தொடர்பாக மத்தியக் குழுவினர் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பார்வையிட்டனர். இன்று திருவாரூர் மாவட்டத்தில் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு வருகின்றனர்.
காவிரி நதி நீர் விடுவது தொடர்பாக மத்தியக் குழுவினர் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பார்வையிட்டனர். இன்று திருவாரூர் மாவட்டத்தில் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு வருகின்றனர்.
மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் ஆர்.கே. குப்தா தலைமையிலான மத்தியக் குழு நீர் இருப்பு குறித்து விசாரணை இன்று திருவாரூர் மாவட்டத்தில் 13 இடங்களில் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றது.
இன்று காலை முதலில் மன்னார்குடி பகுதிக்குச் சென்ற குழு, கருவக்குளம், மழவராயநல்லூர் பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் குறைகளைக் கேட்டது. அப்போது, காவிரியில் பாசனத்துக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தினமும் திறந்துவிட வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய நிலையில் 1.5 டி.எம்.சி.யாவது தண்ணீர் வழங்க வேண்டும். இந்த அளவும் அக்டோபர் மாதம் 20ம் தேதி வரை வழங்கப்பட வேண்டும். அப்போது தான் பயிர்களைக் காக்க முடியும். அதன் பின்னர் வடகிழக்குப் பருவமழை பெய்து விட்டால் ஓரளவு சமாளித்து விடலாம். பயிர்கள் முளைக்கத் தொடங்கும் இந்நேரத்தில் நீர் இல்லாமல் இருக்கும் இதே நிலை இன்னும் 4 நாட்களுக்கு நீடித்தாலே, பயிர்கள் அனைத்தும் கருகிக் காய்ந்து விடும் என்று விவசாயிகள் குழுவினரிடம் கூறினர்.
விவசாயக் கூலிப் பெண்கள், "நீர் இல்லாமல் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகள் ஏதும் இல்லாமல் இருப்பதால், வாழ்வுக்கான வழி இன்றித் தவிக்கிறோம். எனவே, காவிரியில் உடனடியாக தண்ணீர் பெற்றுத்தர பரிந்துரைக்க வேண்டும் என்று இந்தக் குழுவிடம் வலியுறுத்தினர்.
இன்று முழுவதும் திருவாரூர் மாவட்டத்தில் இந்தக் குழு பார்வையிடுகிறது.