முகப்பு
தற்போதைய செய்திகள்

பயிரைக் காக்க காவிரியில் நீர் உடனே திறக்கப்பட வேண்டும்: குழு உறுப்பினர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரியில் நீர் இன்றி பயிர்கள் கருகுவதாக வந்து கொண்டிருந்த புகாரை அடுத்து, இன்று மத்தியக் குழு திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:08 PM
பகிர்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரியில் நீர் இன்றி பயிர்கள் கருகுவதாக வந்து கொண்டிருந்த புகாரை அடுத்து, இன்று மத்தியக் குழு திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது.

இந்தக்குழுவில் இடம்பெற்ற மத்திய நீர்வள ஆணையத்தின் கோவை இயக்குநர் டி.கே.சிவராஜ், விவசாயிகளிடம் கருத்து கேட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

மாவட்டத்தில் விவசாயிகள் பயிரிடுவதற்கு ஏற்ப நிலத்தை தயார் செய்துள்ளனர். பயிர்கள் நீர் இன்மையால் எல்லா இடங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே டெல்டா பகுதிக்கு தண்ணீர் அவசியத்தேவை. இன்று திருவாரூரில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தோம்.

நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இதன் அடிப்படையில் நாளையே அறிக்கை தயார் செய்யப்படும். பின்னர் வெகு விரைவில் இந்த அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →