மதுரா கோட்ஸ் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் சனிக்கிழமை சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் சனிக்கிழமை சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலையில் நிரந்தர தொழிலாளர்கள் 750 பேர் உள்பட 2,500 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். தற்போது தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சம்பள உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மதுரா கோட்ஸ் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஆலைக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் ஷிப்டுக்கு 4 மணி நேரம் மட்டும் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். எஞ்சிய 4 மணி நேரம் பணியில் ஈடுபடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு வாரம் நடைபெறும் என்றார் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஏ. காமராஜ்.