கல்லிடைக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சிறைபிடிப்பு: இளைஞர் கைது
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இளைஞர் மீது வழக்குப் பதிந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இளைஞர் மீது வழக்குப் பதிந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த எம். முகம்மது அப்துல் ரகுமான். இவர் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வருகிறார்.
கல்லிடைக்குறிச்சி வடக்கு புதுத் தெருவை சேர்ந்த சிவனான் மகன் சக்திவேல் (40). இவர் வருமான சான்று வாங்குவது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரை செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்தாராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கிராம நிர்வாக அலுவலர் முகம்மதுஅப்துல்ரகுமானை அவரது அறையில் வைத்து சக்திவேல் கதவை பூட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்துல்ரகுமான் புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸார் அரசு அலுவலரை பணியை செய்ய விடாமல் தடுத்ததாக சக்திவேல் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.