ரயிலில் இருந்து காதல் மனைவியை தள்ளிக்கொன்ற இளைஞர்
காதல் மனைவியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிக் கொலை செய்த கோவில்பட்டி இளைஞர் சா. முருகேசன் (28) மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
காதல் மனைவியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிக் கொலை செய்த கோவில்பட்டி இளைஞர் சா. முருகேசன் (28) மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கோவிந்தம்பட்டி கிராமத்தை
சேர்ந்த சா. முருகேசன். இவர் ஈரோட்டில் சைக்கிளில் வைத்து டீ வியாபாரம்
செய்து வந்தார். திருநெல்வேலி மாவட்டம், கடையம் முதலியார்பட்டி
இந்திராகாலனியை சேர்ந்த சமுத்திரம் மகள் சுந்தரி என்ற பிச்சம்மாள் (24).
சமுத்திரம் முதலியார்பட்டி ஊராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணி செய்து
வருகிறார்.
சுந்தரி ஈரோட்டில் தனியார் ஆலையில் வேலை செய்து வந்தார். அப்போது
சுந்தரிக்கும் முருகேசனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர்
எதிர்ப்பையும் மீறி 2 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
ஈரோட்டில் வசித்து வந்த இத்தம்பதிக்கு ஒரு வயதில் அஸ்வின் என்ற ஆண்
குழந்தை உள்ளது.
இதனிடையே மனைவிக்கு தெரியாமல் முருகேசன், தனது குழந்தையை உறவினரிடம் கொடுத்து விட்டாராம். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறுஏற்பட்டது. இந்த நிலையில் சுந்தரி மீண்டும் கர்ப்பமடைந்தார்.
கேரளாவில் உறவினர் வீட்டில் இருக்கும் குழந்தையை பார்த்து வரலாம் எனக்
கூறி கடந்த சில தினங்களுக்கு முன் முருகேசன், தனது மனைவி சுந்தரியை
அழைத்துக் கொண்டு ரயிலில் கேரளாவுக்கு சென்றாராம். திருச்சூர்
ஒத்தப்பாலம் அருகில் வைத்து சுந்தரியை ரயிலில் இருந்து முருகேசன் தள்ளி
விட்டதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சுந்தரியை அங்கு வயலில் வேலை செய்தவர்கள் மீட்டு
திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுந்தரி வயிற்றில்
இருந்த குழந்தை இறந்து விட்டதால் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
தகவலறிந்த சுந்தரியின் பெற்றோர் திருச்சூர் சென்று, அங்கிருந்து
சுந்தரியை தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்
இம்மாதம் 2 ம் தேதி அழைத்து வந்து சேர்த்தனர். இதனிடையே செவ்வாய்க்கிழமை சுந்தரி சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து சுந்தரியின் சகோதரர் கண்ணன் கடையம் போலீஸில் புகார்
செய்தார். காவல் ஆய்வாளர் ராபின்சன் ரயிலில் இருந்து மனைவிய தள்ளி கொலைசெய்ததாக முருகேசன் மீது வழக்குப் பதிந்து தேடி வருகிறார்.