அம்பாசமுத்திரத்தில் பச்சிளங் குழந்தை குளத்தில் வீசிக் கொலை, பரபரப்பு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பிறந்த ஒரு சில தினங்கள் ஆன ஆண் குழந்தையை குளத்தில் வீசிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பிறந்த ஒரு சில தினங்கள் ஆன ஆண் குழந்தையை குளத்தில் வீசிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே முடப்பாலம் கல்வெட்டான்குளத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த குவாரி அருகில் உள்ள குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாக சனிக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அம்பாசமுத்திரம் போலீஸார், தீயணைப்பு படையினர் குட்டையில் இருந்து பச்சிளங் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிறந்து ஒரு சில தினங்களான ஆண் குழந்தை. குழந்தையின் பெற்றோர் யார் என தெரியவில்லை. குழந்தையின் மூக்கு, காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. தலையில் காயம் உள்ளது. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.