சிதம்பரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
சிதம்பரத்தில் பள்ளி மாணவர் ஒருவர் மர்மக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ளார்.
சிதம்பரத்தில் பள்ளி மாணவர் ஒருவர் மர்மக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ளார்.
காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள முடிகண்டநல்லூரைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் லோகநாதன் (16). இவர் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இன்று காலை கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
தனியார் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்தனர். இந்த நிலையில்,
அங்கு ஸ்கேன் செய்யும் போதே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அங்கு லோகநாதன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் அறிந்ததும், மருத்துவமனை முன்பு திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர், மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தவறிய மருத்துவமனையைக் கண்டித்தும், மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருந்திருக்கும் என்று கூறியும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.