வீரவநல்லூர் மின்நிலையத்தில் தீவிபத்து: மின்விநியோகம் துண்டிப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவு மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவு மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. வீரவநல்லூரில் உள்ள துணை மின்நிலையம் மூலம் வீரவநல்லூர், தெற்குவீரவநல்லூர், மலையான்குளம், பொட்டல், அரிகேசவநல்லூர், அத்தாளநல்லூர், வெள்ளங்குழி, கல்லிடைக்குறிச்சி, மூலச்சி, அம்பாசமுத்திரத்தில் ஒரு பகுதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்ததாம். இதனால் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.
ஏற்கனவே 14 மணி மின்தடையினால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு மக்கள் மேலும் அவதிக்கு உள்ளானார்கள்.