ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கே.என்.நேருவின் தம்பி அரிசி ஆலை இடிக்கும் பணி: பதற்றம்
திமுக.,வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி மணிகண்டனின் அரிசி ஆலை திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள பூ
தற்போதைய செய்திகள்ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கே.என்.நேருவின் தம்பி அரிசி ஆலை இடிக்கும் பணி: பதற்றம்
திமுக.,வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி மணிகண்டனின் அரிசி ஆலை திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள பூ
திமுக.,வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி மணிகண்டனின் அரிசி ஆலை திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள பூவாளூரில் செயல்பட்டு வருகிறது. இது புறம்போக்கு நிலத்தில், ஆக்கிரமித்துக் கட்டப் பட்டதாக வருவாய்த் துறையினர் கூறியுள்ளனர். இதைஅடுத்து, இன்று அதிகாலை சுமார் 1200 ச.அடி. புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரிசி ஆலையின் கட்டடப் பகுதியை இடிப்பதற்காக 3 பொக்லைன் இயந்திரங்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் லால்குடி கோட்டாட்சியர் தலைமையில் சென்றனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாரும் உடன் சென்றனர்.
ஆனால், இந்த நிலத்துக்குச் சமமான பட்டா நிலம் அரசிடம் அளிக்கப்பட்டதாகவும், அது ஆட்சியரின் பரிசீலனையில் இருப்பதாகவும் கே.என்.நேரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் அத்துமீறி தங்கள் இடத்துக்குள் புகுந்ததாக ஒரு புகாரை லால்குடி போலீஸில் அளித்தார் அரிசி ஆலை மேலாளர். அதனைப் பெற்றுக் கொண்ட போலீஸார், அரிசி ஆலை மீது அதிகாரிகள் தரப்பில் தங்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பின்னர் அரிசி ஆலை தரப்பில் அளிக்கப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.
அரிசி ஆலைக்குள் சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் இருப்பதால், அவற்றை அகற்ற வேண்டியுள்ளது. இது உடனே சாத்தியமில்லை. எனவே கால அவகாசம் அளிக்க வேண்டும். நாங்களாகவே ஆக்கிரமிப்பு சுற்றுச் சுவரை அகற்றிவிடுகிறோம் என்று அரிசி ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள் மறுக்கவே, வாக்குவாதம் எழுந்துள்ளது. மேலும், அரிசி ஆலைக்குள் பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செய்தி அறிந்து ஏராளமான திமுகவினர் அங்கே குவிந்துள்ளனர். அதிகாரிகள், போலீஸார் தரப்பும் அரிசி ஆலை தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் காலை முதல் லால்குடி பூவாளூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.