கட்டப்பட்டு வந்த மருத்துவமனை இடிந்தது: 10 பேர் காயம்
ஈரோட்டில் கட்டப்பட்டு வந்த தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்து விழுந்தது.
ஈரோட்டில் கட்டப்பட்டு வந்த தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்து விழுந்தது.
ஈரோடு ஆட்சியர் அலுவலகம் அருகே சம்பத் நகர் பகுதியில், தனியார் மருத்துவமனைக்கான கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இன்று பிற்பகல் 4 மணிக்கு மேல் திடீரென அஸ்திவாரம் பலமிழந்து. கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் 10 பேர் காயம் அடைந்ததாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.