தொடர் மழை: திருவண்ணாமலையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சனிக்கிழமை (அக்டோபர் 20) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சனிக்கிழமை (அக்டோபர் 20) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவிட்டுள்ளார்.
சனிக்கிழமையும் விடுமுறை:
இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் சனிக்கிழமையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவிட்டுள்ளார்.
சனிக்கிழமை விடுமுறை நாள் என்றாலும்கூட, சில தனியார் பள்ளிகள் வழக்கம்போல பள்ளிகளை நடத்தக்கூடும் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.