முகப்பு
தற்போதைய செய்திகள்

வி.கே. புரத்தில் குத்தகை நிலத்தை கையகப்படுத்த கோரி மறியல்: 65 பேர் கைது

 திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் திங்கள்கிழமை குத்தகை நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தி இந்து முன்னணியினர், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 31 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

 திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் திங்கள்கிழமை குத்தகை நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தி இந்து முன்னணியினர், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 31 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி கீழத் தெருவில் பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான 10.04 ஏக்கர் நிலத்தை 54 ஆண்டுகளுக்கு முன் கட்டுக்குத்தகைக்கு எடு்த்த நபர் அந்த நிலத்தை தனது உறவினர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டாராம். மேலும் அந்த நிலத்தை சிலர் விற்பனை செய்து வருவதாக புகார் தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் அங்கு கோயிலில் திரண்டனர்.

உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால் தொடர்ந்து கோயிலில் சமையல் செய்து சாப்பிட்ட அவர்கள் குத்தகை நிலத்தை கையகப்படுத்த வேண்டும். அந்த நிலத்தை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை நிறைவேறும் வரை கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து அங்கு குடியேறினர். இந்த போராட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

திங்கள்கிழமை 2 வது நாளாக அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர், பொதுமக்கள் விக்கிரமசிங்கபுரம் அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் திரையரங்கு அருகில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் பங்கேற்ற இந்து முன்னணியின் மாவட்டச் செயலர் பால்மாரியப்பன், துணைத் தலைவர் பால்ராஜ் மற்றும் 31 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →