கல்லிடைக்குறிச்சி அருகே மாட்டு வண்டிகளை சிறைபிடிப்பு
அம்பாசமுத்திரம் அருகே வியாழக்கிழமை மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளைகிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பாசமுத்திரம் அருகே வியாழக்கிழமை மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை
கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில்
உள்ள சீரான்குளத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்படுகிறது.
பொதுப்பணித்துறை மூலம் பாஸ் வழங்கப்பட்டு, மாட்டு வண்டிகளில் மணல்
எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
தினமும் இங்கிருந்து 300 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் கொண்டு
செல்லப்படுகிறது. மணல் எடுத்து வரும் மாட்டு வண்டிகள் பொட்டல் கிராமத்து
வழியாக வருகின்றன. சாலையில் மணல் எடுத்து வரும் மாட்டு வண்டிகள்
பெருமளவில் அணிவகுத்து வருவதால் சாலை சேதமடைந்து வருகிறது. மேலும்
போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சாலையில் மாட்டு வண்டிகள் செல்வதால்
காலை நேரங்களில் பொட்டல் ஊருக்கு வந்து செல்லும் பஸ்கள் ஊருக்குள் வராமல்செல்கிறது என கிராம மக்கள் தெரிவித்தனர்.
ஆகவே மாட்டு வண்டிகளை மாற்று பாதையில் திருப்பி விட வேண்டும் என கோரிக்கைவிடுத்து பொட்டல் கிராம மக்கள் வியாழக்கிழமை ஊராட்சி அலுவலகம் முன்புமாட்டு வண்டிகளை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சித்தலைவர் முருகன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்துசென்றனர். இதையடுத்து மாட்டு வண்டிகள் சென்றன.
பொட்டல் தெருக்கள் வழியாக மாட்டு வண்டிகள் தினமும் ஏராளமான வண்டிகள்
செல்வதால் சாலை சேதமடைந்து வருகின்றன. சிறிய பாலங்கள் உடைந்தன. மேலும்வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கிராம மக்கள்
பாதிக்கப்படுகின்றனர். ஆகவே மணல் மாட்டு வண்டிகளை வேறு பாதையில் திருப்பிவிட வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் முருகன் கூறினார்.