முகப்பு
தற்போதைய செய்திகள்

பக்ரீத் அன்று திறந்திருந்த தனியார் பள்ளிகளை கண்டித்து முஸ்லிம்கள் சாலை மறியல்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

பக்ரீத் பண்டிகை அன்று செயல்பட்ட சில தனியார் பள்ளிகளை கண்டித்து முஸ்லிம்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால், ஒரு சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி கூறியதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில், சுல்தான்பேட்டையில் பக்ரீத் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்கள், பக்ரீத் அன்று பள்ளிகள் திறந்திருப்பதை கண்டித்து புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 வில்லியனூர் இன்ஸ்பெக்டர் மாறன் தலைமையில் போலீஸôர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

 பக்ரீத் பண்டிகை அன்று பள்ளிகளை இயக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

 இதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

அரசுக் கொறடா கண்டனம்:

 பக்ரீத் பண்டிகை அன்று சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயக்கப்பட்டதற்கு அரசுக் கொறடா ஜி.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

 புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜாதி, மத பேதமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் அரசு விடுமுறை அளிக்கிறது.

 இதனை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மதிக்க வேண்டும்.

 அரசு விடுமுறையை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை வகுப்புக்கு வரும்படி கூறுகின்றனர்.

 இதனால் இஸ்லாமிய சமூகத்தினருக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கல்லூரிகள் தான்தோன்றி தனமாக செயல்படுவது பிரச்சினைகள் ஏற்பட வழி வகுப்பதுடன், மத நல்லிணக்கத்துக்கும் எதிரானது.

 இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற விழா தினங்களில் மாணவர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தாமல் அரசு அறிவிக்கும் விடுமுறை தினத்தை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →