முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்கால் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நீலம் என பெயர்கொண்ட புயல் வலுவடைந்துவருவதையொட்டி பிறகு 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது.

புயலால் துறைமுகத்தின் இடதுபுறப் பகுதி பாதிக்கும் என்பதை குறிப்பதாக 5-ம் எண் ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது. காரைக்காலில் தனியார் துறைமுகத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் வந்து சரக்குகளை இறக்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதையொட்டி துறைமுக நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து துறைமுகம் தரப்பில் மேலும் கூறும்போது, கடந்த 2 நாள்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் துறைமுகத்தினுள் கப்பல் வருவதில்லை. அடுத்த சில நாள்கள் தீவிரமாக கடல் நிலையை கண்காணித்து, அமைதி ஏற்படும்போது கப்பல் துறைமுகத்திற்குள் வர அனுமதிக்கப்படும். தவிர, புயல் உருவானதையொட்டி துறைமுகதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →