பொள்ளாச்சி : மின்சாரம் தாக்கி தம்பதியினர் பலி
பொள்ளாச்சி, செப்., 01 : பொள்ளாச்சி அருகே தங்கராஜ்(55) அவரது மனைவி மாரியம்மாள் (50) ஆகியோர் மேட்டுப்பாளையம் அருகே வசித்து வருகின்றனர். இன்று காலை மாரியம்மாள் வீட்டில் இருந்த இன்டக்சன் ஸ்டவ்வை இயக்கும்
பொள்ளாச்சி, செப்., 01 : பொள்ளாச்சி அருகே தங்கராஜ்(55) அவரது மனைவி மாரியம்மாள் (50) ஆகியோர் மேட்டுப்பாளையம் அருகே வசித்து வருகின்றனர். இன்று காலை மாரியம்மாள் வீட்டில் இருந்த இன்டக்சன் ஸ்டவ்வை இயக்கும் போது மின்சாரம் தாக்கியதில் இருவருமே உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த இவர்கள் திருமுடிவாக்கத்தில் மகாலட்சுமி இன்டஸ்ட்ரிஸ் என்ற உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பெரிய நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுத்து வந்ததால், இவர்கள் சமீபத்தில்தான் பொள்ளாச்சியில் நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.