முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மேலூர், செப்., 04 : தமிழை நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குரைஞர்கள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:46 PM
பகிர்:

மேலூர், செப்., 04 : தமிழை நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குரைஞர்கள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ் மொழியை நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை 10 மணிக்குத் துவங்கிய 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 10 மணிக்கு முடித்திருக்க வேண்டும். ஆனால், வழக்குரைஞர்கள் தங்களது உண்ணாவிரதத்தை முடிக்காமல், இன்றும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →