கிரிக்கெட் மட்டையால் கணவரை தாக்கிக் கொன்ற வழக்கு: எதிர்த்தரப்பு மனு தள்ளுபடி
மதுரை, செப்.5: மதுரை அருகே ஊமச்சிகுளத்தில் அண்மையில் கணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்றார் உஷாராணி என்பவர். இந்த வழக்கில், தன் மகன் ஜோதிபாசுவைக் கொன்ற மருமகள் உஷாராணி மீது சந்தேகம் இருப்பதாவும்,
மதுரை, செப்.5: மதுரை அருகே ஊமச்சிகுளத்தில் அண்மையில் கணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்றார் உஷாராணி என்பவர். இந்த வழக்கில், தன் மகன் ஜோதிபாசுவைக் கொன்ற மருமகள் உஷாராணி மீது சந்தேகம் இருப்பதாவும், போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை என்றும் கூறி வழக்கு தொடர்ந்தார் தந்தை சமயமுத்து. இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, இந்த வழக்கில் விசாரணை சரியான முறையில் நடைபெற்றுள்ளது என்றும், மனுதாரருக்கு வேறு ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என்றும் கூறி, இந்த மனுவைத் தள்ளூபடி செய்வதாக உத்தரவிட்டார்.