தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
நாகப்பட்டினம், செப்.6: தமிழக மீனவர்கள் மீது நேற்று இரவு இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி விரட்டியதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து 13 கடல் ம
நாகப்பட்டினம், செப்.6: தமிழக மீனவர்கள் மீது நேற்று இரவு இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி விரட்டியதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து 13 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை படை தாக்கியுள்ளது. தமிழக மீனவர்கள் 9 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீனவர்களை இரும்பு பைப்புகளால் தாக்கியதாகவும், 2 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் விரட்டியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் கூறினர்.