அவனியாபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து 65 சவரன் நகை திருட்டு
திருப்பரங்குன்றம், செப்., 07 : மதுரை மாவட்டம் அவனியாபுரம் அடுத்த மேல அனுப்பானடி பகுதியில் சோலைமுருகன் என்பவரது வீட்டில் இன்று 65 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணம் திருடுப் போயுள்ளது. இன்று மதியம்,
திருப்பரங்குன்றம், செப்., 07 : மதுரை மாவட்டம் அவனியாபுரம் அடுத்த மேல அனுப்பானடி பகுதியில் சோலைமுருகன் என்பவரது வீட்டில் இன்று 65 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணம் திருடுப் போயுள்ளது.
இன்று மதியம், சோலைமுருகனின் மனைவி வீட்டை பூட்டாமல், தாழ்ப்பாள் போட்டுவிட்டு அருகில் தண்ணீர் எடுக்க சென்றிருந்தார். அப்போது, வீட்டின் மொட்டைமாடியில் இருந்து வீட்டுக்குள் வந்த திருடன் வீட்டுக்குள் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளான்.
இது குறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.