முகப்பு
தற்போதைய செய்திகள்

கிரானைட் முறைகேடு : 3 நிறுவனங்கள் மீது கீழவளவு போலிஸ் வழக்கு

மேலூர், செப்., 08 : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிலம், கண்மாய், காள்வாய், புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் திருடப்பட்டதாக பிஆர்பி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செ

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:49 PM
பகிர்:

மேலூர், செப்., 08 : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிலம், கண்மாய், காள்வாய், புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் திருடப்பட்டதாக பிஆர்பி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிரானைட் முறைகேடு தொடர்பாக 21க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ன.

இதைத் தொடர்ந்து கீழவளவு கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் அளித்துள்ள புகாரில் கீழவளவு பகுதியில் செயல்படும் ஆர்வி என்டர்பிரைசஸ் கிரானைட் நிறுவனம், தனக்கு ஒதுக்கப்பட்ட சர்வே எண் 257/2 என்ற இடத்தில் கிரானைட் கற்களை வெட்ட உரிமம் பெற்று அந்த இடத்தை விட்டுவிட்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று எம்எஸ் கிரானைட் நிறுவனம் சர்வே எண் 267/2 ல் அனுமதி பெற்றும், கோரமண்டல் கிரானைட் நிறுவனம் 264/ லும் கிரானைட் வெட்டி எடுக்க உரிமம் பெற்றுள்ளன.

ஆனால் இந்த நிறுவனங்கள் சட்ட விரோதமாக அரசுக்கு சொந்தமான பகுதிகளில் ஏராளமான கற்களை வெட்டித் திருடியுள்ளனர் என விஏஓ தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பேரில் கீழவளவு போலிஸார் இன்று அந்த 3 நிறுவனங்கள் மீதும் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →