முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் போராட்டம்

சிதம்பரம், செப்., 13 : சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 முடித்ததும், 5 ஆண்டுகளைக் கொண்ட ஒருங்கிணைந்து முதுகலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதில் சேர்ந்து படித்த மாணவ, மாணவிக

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:53 PM
பகிர்:

சிதம்பரம், செப்., 13 : சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 முடித்ததும், 5 ஆண்டுகளைக் கொண்ட ஒருங்கிணைந்து முதுகலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதில் சேர்ந்து படித்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. இந்த படிப்பு போதுமான தகுதியாக எடுத்துக் கொள்ளப்படாது என்று வாரியம் நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில், தங்களது படிப்புக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி, ஒருங்கிணைந்த பட்டப்படிப்பை முடித்தவர்களும், தற்போது படித்து வரும் மாணவர்களும், வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு கல்லூரியில் இருந்து சிதம்பரம் காந்தி சிலை அருகே ஊர்வலமாக வந்தனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகளிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments