விண்ணப்பம் கோரி கூட்டுறவு வங்கி முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி, செப்., 17 : பண்ருட்டியை அடுத்து அங்குச்செட்டி பளையம் கூட்டுறவு வங்கி முன்பு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்க கோரி பண்ருட்டி ஒன்றிய திமுகவினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திர
பண்ருட்டி, செப்., 17 : பண்ருட்டியை அடுத்து அங்குச்செட்டி பளையம் கூட்டுறவு வங்கி முன்பு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்க கோரி பண்ருட்டி ஒன்றிய திமுகவினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் தலைமையில் இன்று காலை முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கூட்டுறவு சங்கத்துக்கான புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்படுதில் பல பகுதிகளில் முறையான தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும், விண்ணப்பங்கள் அதிமுக உறுப்பினர்களுக்கு மட்டும் கொடுப்பதாகவும் பல இடங்களில் புகார் வந்துள்ளது.
விவசாய சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள், கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக சேர விண்ணப்பம் கோரினால், கூட்டுறவு வங்கியின் செயலர் விண்ணப்பம் வழங்குவதற்கான கடைசி தேதி 12ம் தேதியுடன் முடிந்துவிட்டதாகக் கூறி விண்ணப்பங்களை வழங்க மறுக்கிறார்.
இது குறித்து எழுதிக் கொடுங்கள் என்று முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் கேட்டதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை. அங்கு வந்த போலிஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, ராஜேந்திரன் தலைமையிலான திமுகவினர், கூட்டுறவு வங்கியை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.