பிரதமர், சோனியா மீது எப்ஐஆர் பதிவு : விஜயராஜா உறவினர்கள் கோரிக்கை
சேலம், செப்., 18 : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்
தற்போதைய செய்திகள்பிரதமர், சோனியா மீது எப்ஐஆர் பதிவு : விஜயராஜா உறவினர்கள் கோரிக்கை
சேலம், செப்., 18 : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்
சேலம், செப்., 18 : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்று, அவரது உறவினர்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த சேலம் தாசில்தார் சுரேஷையும், பேசவிடாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜாவின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்தால்தான் அவரது உடலை அங்கிருந்து எடுக்கவே நாங்கள் அனுமதிப்போம் என்று பல்வேறு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.