முகப்பு
தற்போதைய செய்திகள்

குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை கொலை; மகன் கைது

திருக்கோவிலூர், செப்., 20 : திருக்கோவிலூர், சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்த முரளி (20), இவரது தந்தை பெயர் காசி (48). காசி எப்போதும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பிரச்னை செய்வது வழக்கம். இரண்டு நாட்கள

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:58 PM
பகிர்:

திருக்கோவிலூர், செப்., 20 : திருக்கோவிலூர், சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்த முரளி (20), இவரது தந்தை பெயர் காசி (48).

காசி எப்போதும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பிரச்னை செய்வது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்த காசி, முரளியை தடியால் அடித்துள்ளார். இந்த நிலையில் இன்று குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்த காசியை, முரளி தடியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த காசியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே காசி உயிரிழந்துவிட்டார். இது குறித்து மணலூர்பேட்டை  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முரளியை கைது செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →