முகப்பு
தற்போதைய செய்திகள்

புரட்டாசி முதல் சனிக்கிழமை: மலையப்பசுவாமியாக காரைக்கால் பெருமாள்

காரைக்கால், செப். 22 : புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து முதல் சனிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் மலையப்பசுவாமி அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். காரைக

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

காரைக்கால், செப். 22 : புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து முதல் சனிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் மலையப்பசுவாமி அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் மூலவரான ரங்கநாதப் பெருமாள் சயன நிலையில் அருள்பாலிக்கிறார். உற்ஸவரான ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் தரிசனம் தருகிறார். இதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

வைணவத் தலங்களில் புகழ்பெற்று விளங்கும் இக்கோவிலில் புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து, முதல் சனிக்கிழமையான 22-ம் தேதி உற்ஸவர் ஸ்ரீ மலையப்பசுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் காலை முதல் மூலவரான ஸ்ரீ ரங்கநாதரையும், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளையும் வழிபாட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவும் செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →