அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இணையதளத்தில்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் ஏப்.1-ந் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359; மேலும் மொபைல் போனில் RCQ Enr.no/ RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட முடிவுகள்: பிஎஸ்சி- தாவரவியல், விலங்கியல், வேதியியல், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன்; எம்ஏ தமிழ், எம்ஏ-எம்எஸ்சி அப்ளைடு சைக்காலஜி; எம்ஏ- பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், டிஸ்ஸாஸ்டர் மேனேஜ்மெண்ட், ஹியுமன் ரைட்ஸ், அஸ்ட்ராலஜி; எம்எஸ்சி- வேதியியல், ஜியோ-இன்பர்மேட்டிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயன்ஸ், மீடியா கிராபிக்ஸ் அனிமேஷன், கிராபிக்ஸ் & அனிமேஷேன், எம்.எஃப்.ஏ டிஜிட்டல் கிராபிக்ஸ் டெக்னாலஜி, எம்.சி.ஏ., எம்.ஹெச்.எஸ்சி- வெல்நெஸ் பிட்னஸ் சயன்ஸ், பிசியோதெரபி, அப்ளைடு எர்கோனாமிக்ஸ்; எம்.டான்ஸ்., எம்பிஏ மற்றும் டிப்ளமா வகுப்புகள்.