திருமணமான இளம்பெண் தற்கொலை: கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு
திருவாரூர் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கலைச்செல்விக்கும், சிதம்பரத்தை அடுத்த சிவாயத்தைச் சேர்ந்த ஜவகருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்
சிதம்பரம் அருகே திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக பெண்ணின் தாயார் கொடுதத் புகாரின் பேரில் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கலைச்செல்விக்கும், சிதம்பரத்தை அடுத்த சிவாயத்தைச் சேர்ந்த ஜவகருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இரண்டரை வயதில் மனோதினி என்ற பெண் குழந்தை உள்ளார். வெளிநாட்டிலில் வேலை பார்த்து வரும் ஜவகர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி (32) ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் விசாரணை மேற்கொண்டு அப்பெண்ணின் உடல் பிரதே பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கலைச்செல்வியின் தாயார் தமிழரசி சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அப்புகாரில் எனது மகள் திருமணத்திற்கு 60 பவுன் நகைகளும், காரும் கேட்டனர். 40 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்தோம். தற்போது நகை மற்றும் கார் கேட்டு கணவர் ஜவகர், மாமனார் செல்வரங்கம், மாமியார் மலர்கொடி, நாத்தனார் பாரதி ஆகிய நான்கு பேரும் எனது மகளை துண்புறுத்தியுள்ளனர். எனவே எனது சாவில் சந்தேகம் உள்ளதாக புகாரில் தமிழரசி தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீஸார் மேற்கண்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் வரதட்சிணை கொடுமையா என சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டார்.