தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் அருகே விவசாயியை தாக்கிய தந்தை, மகன் கைது

சாத்தான்குளம் அருகே மாடு மேயந்த தகராறில் விவசாயியை தாக்கியதாக தந்தை, மகனை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கவிதன்

சாத்தான்குளம் அருகே மாடு மேயந்த தகராறில் விவசாயியை தாக்கியதாக தந்தை, மகனை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சி.திருமணிராஜ் (27) இவர் பூவுடையார்புரத்தில் காசி என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகிறாராம். இவரது தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த சி.நடராஜன் என்பவரது மாடு மேய்ந்தததாம். இதனை திருமணிராஜ் அடித்து விரட்டினாராம். நேற்று நடராஜன் அவரது மகன் சுடலைமணி (34) ஆகியோர் திருமணிராஜிடம் சென்று எங்களது மாட்டை எப்படி விரட்டலாம் என கேட்டனராம். இதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து திருமணிராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய சிறப்பு உதவி-ஆய்வாளர் தங்கதுரை வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT