முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் வாய்க்காலில் கவிழ்ந்த கார்: பேராசிரியர் உள்ளிட்ட இருவர் லேசான காயம்

சிதம்பரம் முத்தையா நகரில் வசிப்பவர் கனகசபாபதி. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறையில் பேராசிரியராக உள்ளார். இவரது

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:06 AM
பகிர்:

சிதம்பரம் முத்தையாநகர் அருகே கான்சாகிப் வாய்க்காலில் கார் ஒன்று கவிழ்ந்த்து. இதில் பல்கலைக்கழக பேராசிரியரும், அவரது மனைவியும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

சிதம்பரம் முத்தையா நகரில் வசிப்பவர் கனகசபாபதி. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறையில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி சில்வியா மருத்துவக்கல்லூரியில் மருத்துவராக உள்ளார். இருவரும் இன்று மதியம் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றனர். அப்போது முத்தையாநகர் பாலம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி இடதுபுறம் உள்ள கான்சாகீப் வாய்க்காலில் கார் தலை கீழாக கவிழ்ந்தது. இதில் இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →