ஸ்ரீமுஷ்ணம் தனி ஒன்றியமாக அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தை தனி ஒன்றியமாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீமுஷ்ணத்தில் நகர அ.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தை தனி ஒன்றியமாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீமுஷ்ணத்தில் நகர அ.தி.மு.கவினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கலியமூர்த்தி, நகரச் செயலாளர் பூமாலை கேசவன், ஒன்றியக்குழுத் தலைவர் எம்.மணிகண்டன், தொகுதி செயலாளர் பாலசுந்தரம், கிளைச் செயலாளர் அய்யப்பன், ஜெயவேல், துரை தியாகராஜன், ராஜா ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.