பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்கள் இணையதளம் மூலம் இணைப்பு
பொறியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து நூலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.
பொறியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து நூலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அவர் தாக்கல் செய்த உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகம், அறிவியல் நகரம், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து நூலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்படும். இதனால் மாணவர்கள் புத்தகங்கள், பருவகால இதழ்கள், மேற்கோள் நூல்களை எளிதாக படிக்க முடியும்.
Advertisement
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் 2012-13-ம் ஆண்டில் Wi-Fi இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. 2013-14-ம் ஆண்டில் அனைத்து வளாகங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.