அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு மேலும் இரு அதிகாரிகள் நியமனம்!
அண்ணாமலைப் பல்கலைக்கழக நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் என்பவரை தமிழகஅரசு நியமனம் செய்தது. பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் நேற்று அவர் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் தமிழகஅரசு நிர்வாக அதிகாரிக்கு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு மேலும் இருஅதிகாரிகளை தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் என்பவரை தமிழகஅரசு நியமனம் செய்தது. பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் நேற்று அவர் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் தமிழகஅரசு நிர்வாக அதிகாரிக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் இரு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஸ்துராஜ் ஆகியோர் பல்கலைக்கழக வருவாய்துறை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.