அண்ணாமலைப் பல்கலைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும்: முன்னாள் எம்பி டாக்டர் பி.வள்ளல்பெருமான்
இதுகுறித்து தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரி ஷிவ்தாஸ்மீனாவை சந்தித்து டாக்டர் ப.வள்ளல்பெருமான் அளித்துள்ள கடிதத்தில்: மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மிகப்பெரிய சான்றோர்கள், கல்வியாளர்கள், துணைவேந்தர்களாக
நிர்வாக சீர்திருத்தங்கள் செய்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும் முன்னாள் எம்பியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் ப.வள்ளல்பெருமான் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரி ஷிவ்தாஸ்மீனாவை சந்தித்து டாக்டர் ப.வள்ளல்பெருமான் அளித்துள்ள கடிதத்தில்: மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மிகப்பெரிய சான்றோர்கள், கல்வியாளர்கள், துணைவேந்தர்களாக பணியாற்றியுள்ளனர். சமீப காலமாக நிர்வாகம் மற்றும் நிதி சீர்கேடுகளினால் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகஅரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து அறிக்கை சமர்பித்ததின் அடிப்படையில் தமிழகஅரசு நிர்வாக அதிகாரியாக தங்களை நியமனம் செய்துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி மற்றும் ஊதிய உத்திரவாதமும், பதவு உயர்வு வழங்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். ஆள்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். எஸ்சி., எஸ்டிக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்திட வேண்டும். அரசு பொறியியல் கல்லூரிகளில் கவுன்சிலிங் முறையில் அனுமதி சேர்க்கை நடைபெறுவது போல், அண்ணாமலைப் பல்கலையிலும் வெளிப்படையான அனுமதி சேர்க்கை செய்திட வேண்டும். அரசு பல்கலைக்கழகத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளையும் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.