முகப்பு
தற்போதைய செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி: ஸ்ரீமுஷ்ணத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் சீனுவாசன். இவர் சென்னை சிட்லபாக்கத்தில் ‘’பார்ச்சுயூன் எண்டர்பிரைசஸ்’’ என்ற நிதி நிறுவனத்தை நடத்தி

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:08 AM
பகிர்:

சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் வீட்டில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் சீனுவாசன். இவர் சென்னை சிட்லபாக்கத்தில் ‘’பார்ச்சுயூன் எண்டர்பிரைசஸ்’’ என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். தங்களிடம் டிபாசிட் செய்யும் பணத்தை ஒரு ஆண்டில் இரு மடங்காக திருப்பித் தருவதாகக் கூறி மக்களிடம் பல லட்சம் ரூபாய்களை வசூல் செய்தார். முதலில் 4 ஆண்டுகளுக்குச் சிறிய தொகைகளைக் கட்டிய மக்களுக்கு இரண்டு மடங்கு தொகையை வழங்கினார். இதனை நம்பிய பலர், பல கோடி ரூபாயை டிபாசிட் செய்தனர். வசூல் செய்த தொகையைத் திருப்பி தராமல் சீனுவாசன் தி்டீரென தலைமைவானார்.

பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மார்ச் மாதம் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி அசோக்குமாரிடம் புகார் செய்தனர். விசாரணையில் சீனுவாசன் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 90 லட்சம் ரூபாய்க்கு மேலும், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் 25 கோடி ரூபாய்க்கு மேலும் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி ஆனிவிஜயா தலைமையில் தனிப்படை போலீஸார் சீனுவாசனின் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தி, அவரது வீடுகளில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வெள்ளாழத் தெருவில் உள்ள சீனுவாசன் வீட்டில்  சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து வங்கி லாக்கர்களிலும் சோதனை நடத்தி விட்டு சென்னை திரும்பினர். மேலும் பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் புகார் அளிக்க விரும்பினால் 04426220332 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →