நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கனிமொழி
வரும் 2014ல் நடைபெறவுள்ள நாடளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் திமுக நாடாளுமன்ற
வரும் 2014ல் நடைபெறவுள்ள நாடளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
இன்று மதுரையில் நடைபெறும் கட்சியினர் இல்லத் திருமணவிழா ஒன்றுக்காக மதுரை விமான நிலையம் வந்திறங்கிய அவரிடம் செய்தியாளர்கள் பேசினர்.
அப்போது அவரிடம், தேமுதிகவுடன் வரும் தேர்தலில் கூட்டணி என்று பேசப்படுகிறதே என்று கேட்டனர். அதற்கு அவர், இது குறித்து கட்சி மேலிடம்தான் தீர்மானிக்கும் என்றார்.
மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தலைமை அதுகுறித்து முடிவு செய்யும் என்றார். மதுரையில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் 5 பேர் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது கட்சியின் மேலிட முடிவு. நான் ஒன்றும் சொல்ல முடியாது என்று கூறிய அவர் பின்னர் அங்கிருந்து நேராக மு.க.அழகிரி வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார்.