இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு-ஆகாசம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் சுகந்தி (18). இவரும் ஆகாசம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த சேர்ந்த
தற்போதைய செய்திகள்இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு-ஆகாசம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் சுகந்தி (18). இவரும் ஆகாசம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த சேர்ந்த
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு-ஆகாசம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் சுகந்தி (18). இவரும் ஆகாசம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த சேர்ந்த ரத்னபாண்டியன் மகன் கார்த்திகேயன் (24) என்பவரும் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் விரும்பி வந்துள்ளார்கள்.
இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சுகந்தியை, இரு சக்கர வாகனத்தில் வந்த கார்த்திகேயன் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு தாணிப்பாறை அருகேயுள்ள ஒரு தோப்பிற்கு கொண்டு சென்றாராம். அங்கு சுகந்தியை கார்த்திகேயன் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் சுகந்தி, கார்த்திகேயனை தள்ளிவிட்டுவிட்டு ஓடி வந்துவிட்டாராம். இச் சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து இன்று வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் சுகந்தி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயனைக் கைது செய்தனர்.