சாக்கடைக் கால்வாயில் முதியவர் சடலம்
சேலம் தாதுபாய்குட்டை, நேரு நகர் பகுதியில் செல்லும் பிரதான சாக்கடைக் கால்வாயில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசுக்கு தகவல்
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே சாக்கடைக் கால்வாயில் இருந்து முதியவர் சடலம் மீட்கப்பட்டது.
சேலம் தாதுபாய்குட்டை, நேரு நகர் பகுதியில் செல்லும் பிரதான சாக்கடைக் கால்வாயில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கால்வாயில் இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. முதியவர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்று செவ்வாய்ப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement