யானை தாக்கி பெண் படுகாயம்
கோபியை அடுத்த டி.என்.பாளைத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள்(52) மற்றும் இவரது வீட்டின் அருகில் உள்ள குமார்(19) என்பவரும் டி.என். பாளையம் அருகில் உள்ள வனப்பகுதியில் விறகு பொறுக்கச் சென்றனர்.அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் புதரில் மறைந்திருந்த யானை ஒன்று திடீரென வெளியே
கோபியை அடுத்த டி.என்.பாளைத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள்(52) மற்றும் இவரது வீட்டின் அருகில் உள்ள குமார்(19) என்பவரும் டி.என். பாளையம் அருகில் உள்ள வனப்பகுதியில் விறகு பொறுக்கச் சென்றனர்.அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் புதரில் மறைந்திருந்த யானை ஒன்று திடீரென வெளியே வந்தது. விறகு பொறுக்கிக் கொண்டிருந்த பொன்னம்மாளை திடீரென தாக்கியது. உடன் சென்ற குமார் செய்வதறியாமல் அருகில் இருந்த புதரில் ஒளிந்து கொண்டான். யானை அங்கிருந்து சென்ற பின் குமார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் எடுத்துக் கூறினார்.
பொன்னம்மாளை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.