முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழி அருகே காவல் நிலைய வளாகத்தில் 2 பேர் வெட்டிக் கொலை

சீர்காழிஅருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்துக்குள்ளேயே இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:22 AM
பகிர்:

சீர்காழிஅருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்துக்குள்ளேயே இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலைய வளாகத்துள் ரவி, ராஜேந்திரன் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேலையூரில் கொலை செய்யப்பட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராஜேந்திரன் என்பவரின் கொலை வழக்கில் கைதாகி தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர். பூம்புகார் காவல் நிலையத்தில் இருவரும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இருவரும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பும்போது, ஒரு மர்ம கும்பல் திடீரென அங்கே நுழைந்து காவல் நிலைய வளாகத்திலேயே அரிவாளால் வெட்டி ரவியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தது. 

அதற்கு சற்று நேரம் முன்பாக கையெழுத்து போட்டுவிட்டு வெளியே சென்ற ராஜேந்திரன், காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் சென்றிருந்தபோது, அவரையும் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தது. இருவர் கொலை தொடர்பாக தகவல் அறிந்த நாகை மாவட்ட எஸ்பி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  இதற்கிடையே சடலங்களை  அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →