கணினி மையத்துக்குச் சென்ற மாணவியை காணவில்லை: தந்தை போலீஸில் புகார்
சிதம்பரத்தில் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற மாணவியை காணவில்லை என அவரது தந்தை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரத்தில் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற மாணவியை காணவில்லை என அவரது தந்தை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் சாத்தப்பாடித்தெருவைச் சேர்ந்த பாஸ்கர். இவரது மகள் மஞ்சுளா (17). பிளஸ்டூ தேர்வு எழுதி்யுள்ள இவர் வடக்குரதவீதியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த ஏப்.16-ம் தேதி கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் மாணவியன் தந்தை பாஸ்கர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.