முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் பொருத்த ராஜீவ்காந்தி படத்தை வழங்கிய காங்கிரஸார்!

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள், பிரதமர் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப்படம் வைக்கப்படாததால், அவரது உருவப்படத்தை வைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.ஆர்.சச்சிதானந்தம், முன்னாள் எம்எல்ஏ எஸ்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:23 AM
பகிர்:

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் பொருத்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப்படத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உதவிஆட்சியரிடம் வழங்கினர்.

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள், பிரதமர் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப்படம் வைக்கப்படாததால், அவரது உருவப்படத்தை வைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.ஆர்.சச்சிதானந்தம், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜெயச்சந்திரன், வட்டாரத் தலைவர் ஞானசேகரன், நிர்வாகிகள் பாலா, முருகன் உள்ளிட்டோர் உதவிஆட்சியரை வெள்ளிக்கிழமை சந்திக்கு வலியுறுத்தினர். அப்போது ராஜீவ்காந்தி படத்தை வைக்க அனுமதி அளித்தார். அதன்பேரில் காங்கிரஸ் நிர்வாகிகள் உதவிஆட்சியரிடம் அலுவலகத்தில் பொருத்த ராஜீவ்காந்தி படத்தை வழங்கினர்.

முழு கட்டுரையைப் படிக்க →