முகப்பு
தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயிலில் செயின் பறிக்க முயன்ற போது ரூ.10 கள்ள நோட்டுடன் சிக்கிய பெண்கள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றி இரு பெண்கள் மகளிர் போலீஸார் பிடித்தனர். புிடிபட்ட அப்பெண்களிடம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:24 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றி இரு பெண்கள் மகளிர் போலீஸார் பிடித்தனர். புிடிபட்ட அப்பெண்களிடம் கட்டாக ரூ.10 கள்ள நோட்டுகள் இருந்தது.

சிதம்பரம் கொத்தவால்தெருவைச் சேர்ந்த பட்டுசாமி மனைவி கல்யாணி (40). இவர் நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது இரு பெண்கள் கல்யாணியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயன்றனர். கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு பாதுகாப்பில் இருந்த சங்கத்தமிழ் உள்ளிட்ட இரு மகளிர் போலீஸார் அப்பெண்கள் துரத்தி பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில் திருச்சி சமயபுரம் கந்தப்பேட்டையைச் சேர்ந்த மணிமேகலை (27), அதே பகுதியைச் சேர்ந்த கல்தூரி (20) என தெரியவந்தது. மேலும் அப்பெண்கள் கட்டாக ரூ.10 கள்ள நோட்டு வைத்தி்ருந்ததும் விசாரணையில் தெரியவந்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.