முகப்பு
தற்போதைய செய்திகள்

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிறப்பு ரகசிய பூஜை

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் உள்ள ஸ்ரீமூலநாதருக்கு பெளர்ணமி அபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:27 AM
பகிர்:

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் உள்ள ஸ்ரீமூலநாதருக்கு பெளர்ணமி அபிஷேகம் நடைபெற்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இரவு அர்த்தஜாம பூஜையில் சிறப்பு ரகசியபூஜை நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வியாழக்கிழமை இரவு சந்திர கிரகனம் என்பதால், ஸ்ரீ நடராஜர் கோயிலில் சிறப்பு ரகசிய பூஜை வியாழக்கிழமை காலை இரண்டாம் காலத்தில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமானை தரிச்சனர். பூஜையின் போது பல விதமான பழங்கள் நெய்வேத்யங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள ஸ்ரீமூலநாதருக்கு சித்ரா பெளரணியை முன்னிட்டு மருக்கொழுந்தினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். 

தனிக்கோயில் கொண்டுள்ள சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு: தமிழகத்திலேயே சித்ரகுப்தனாருக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோயிலும், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலிலும் தனிக்கோயிலும் உள்ளது. ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தர் அம்மன் கோயில் பிரகாரத்தில் சித்ரகுப்தனுக்கு தனிக்கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்ரா பெளர்ணியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சித்ரா குப்தனை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.