முகப்பு
தற்போதைய செய்திகள்

இடநெருக்கடியில் பழமை வாய்ந்த சிதம்பரம் கிளைநூலகம்: நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படுமா!

சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் உள்ள வாடகை கட்டடத்தில் 1954-ல் கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இக்கிளை நூலகம் 2007-ம் ஆண்டு அங்கிருந்து மாற்றப்பட்டு சின்னகாஜியார் தெருவில் உள்ள வாடகை கட்டடத்தில் இரண்டாவது மாடியில் குறுகலான இடத்தில் இயங்கி வருகிறது. வாசகர்கள் அமர்ந்து நூல்களை

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:28 AM
பகிர்:

ஆயிரம் நூல்களை கொண்ட பழமை வாய்ந்த சிதம்பரம் கிளை நூலகம் வாடகை கட்டடத்தில் போதிய இடவசதியின்றி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளை நூலகத்தில் விரைவில் கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் உள்ள வாடகை கட்டடத்தில் 1954-ல் கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இக்கிளை நூலகம் 2007-ம் ஆண்டு அங்கிருந்து மாற்றப்பட்டு சின்னகாஜியார் தெருவில் உள்ள வாடகை கட்டடத்தில் இரண்டாவது மாடியில் குறுகலான இடத்தில் இயங்கி வருகிறது. வாசகர்கள் அமர்ந்து நூல்களை படிக்க முடியாத நிலை உள்ளது. நூல்களை வைக்கவும், பாதுகாக்கவும் போதுமான இடம் இல்லை. இந்த கிளை நூலகத்தில் 3600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்தம் 87 ஆயிரம் நூல்கள் உள்ளது. தினமும் சுமார் 400-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்லுகின்றனர். தினமும் 300-க்கும் மேற்பட்டோர் நூல்களை வாங்கிச் சென்று படித்து வருகின்றனர். இந்த நூலகத்தில் முதுநிலை கிளை நூலகர் மற்றும் 5 நூலகர்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 77 வருவாய் வட்ட நூலகங்களின் தரத்தை உயர்த்த 2 மாடி கட்டடடம் கட்டி, குளு குளு வசதியுடன் ஐஏஎஸ். ஐபிஎஸ் பயிற்சியும் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிதம்பரம் கிளை நூலகத்தை தரம் உயர்த்த தமிழகஅரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டடடம் கட்டுவதற்கு சிதம்பரம் கச்சேரித்தெருவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோப்பு ஆட்சியரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆட்சியரிடமிருந்து கோப்புகள் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் நிலை உள்ளது. எனவே கடலூர் மாவட்ட ஆட்சியர் பழமை வாய்ந்த் சிதம்பரம் கிளை நூலகத்தை தரம் உயர்த்தவும், கட்டடவும் கட்டவும் உடனடியாக கோப்பினை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் பகுதி நூலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.