கரூர் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி: மீட்கும் பணி தீவிரம்
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தூரியம்பாளையம் பகுதியில் முத்துப்பாண்டியன் என்பவரின் மகள் முத்துலட்சுமி (7) தன் தந்தையுடன் தோட்டத்துக்கு இன்று காலை முருங்கைக்காய் பறிக்கச் சென்றார்.
1ம் வகுப்பு படித்து வரும் இந்தச் சிறுமி அங்கிருந்த போர்வெல் குழாய் துளையில் தவறி விழுந்தார். அதன் 20 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. அவரை மீட்கும் பணியில் 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.