தற்போதைய செய்திகள்

மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது: அமைச்சர் வைகைச்செல்வன்

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இக்கல்லூரியின் கலையரங்கத்தில் நடந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் வைகைச்செல்வன்

எஸ். பாண்டியன்

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருவதாகவும், அதற்கு நூலகத்துறை மூலம் வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவி்த்தார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இக்கல்லூரியின் கலையரங்கத்தில் நடந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் வைகைச்செல்வன் பங்கேற்று பேசியதாவது: இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவரே தமிழக முதல்வர்தான். அதோடு, பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கும் குறைந்து கொண்டே வருகிறது.

அதனால் நூலகத்துறையின் சார்பில் நூலகர் வாசகர் வட்டத்தை உருவாக்கி மாணவ, மாணவிகள் மத்தியிலும், பிறரிடத்திலும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, இங்கு வந்துள்ள நீங்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் நாள்தோறும் 50 பக்கங்களாவது படிப்போம் என்று உறுதியேற்றுக் கொள்வது அவசியம். ஏனென்றால், வருங்காலம் போட்டிகள் நிறைந்த உலகமாகவே இருக்கும். அதனால், மாணவர்களாகிய நீங்கள் சீரிய சிந்தனையோடு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.அகிலந்திய அளவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. அதனால், எந்த நோக்கத்திற்காக மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியை முதல்வர் வழங்கினாரோ, அந்த வகையில் உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். அதையடுத்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மொத்தம் 586 பேருக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி்க்கு கல்லூரியின் செயலாளர் ஜி,ராஜ்குமார் தலைமை வகித்தார்.  முதல்வர் ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் குணசேகரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக இக்கல்லூரியின் துணை முதல்வர் ரவிபிரபு நன்றி கூறினார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT