முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்வி அமைச்சரிடம் ஆசிரியப் பயிற்றுநர்கள் கோரிக்கை மனு

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியராக பள்ளிக்கு பணிமாறுதல் செய்யும் ஆசிரியர் பயிற்றுநர்களின் எண்ணிக்கையை

தற்போதைய செய்திகள்

கல்வி அமைச்சரிடம் ஆசிரியப் பயிற்றுநர்கள் கோரிக்கை மனு

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியராக பள்ளிக்கு பணிமாறுதல் செய்யும் ஆசிரியர் பயிற்றுநர்களின் எண்ணிக்கையை

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:31 AM
பகிர்:

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வனை தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கோரிக்கை மனுவில்: புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியராக பள்ளிக்கு பணிமாறுதல் செய்யும் ஆசிரியர் பயிற்றுநர்களின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்களின் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக  நடத்திட வேண்டும். நிலையான பயணப்படி தொகையை அதிகப்படுத்த வேண்டும்.ஆசிரியர் பயிற்றுநர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் தொடர்பான மனு அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது, மாநில துணைத்தலைவர் ச.மாடசாமி, விருதுநகர் மாவட்டத்  தலைவர் க.குருசாமி, செயலாளர் சு.முருகு திருநாவுக்கரசு,  மாவட்ட பொருளாளர் பிரதாப், மாவட்ட துணைத்தலைவர் சி.கந்தசாமி, அருப்புகோட்டை  வட்டார பொறுப்பாளர் ச.சுப்பையா, வத்ராப்  வட்டார பொறுப்பாளர் ச.சுரேஷ் , நரிக்குடி  வட்டார பொறுப்பாளர் அருண் மோகன் காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →