சிதம்பரம் அருகே கிளியாளம்மன் கோயிலில் ஐம்பொன் சிலை, வெள்ளி கிரீடம் திருட்டு!
சிதம்பரம் அருகே பி.முட்லூரை அடுத்து கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிளியாளம்மன்கோயில் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்து அங்கு நிறுத்தி சூடம் ஏற்றி
சிதம்பரம் அருகே கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிளியாளம்மன் கோயிலில் ஐம்பொன்சிலை, வெள்ளி கிரீடம் ஆகியவை திருடு போனது.
சிதம்பரம் அருகே பி.முட்லூரை அடுத்து கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிளியாளம்மன்கோயில் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்து அங்கு நிறுத்தி சூடம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இக்கோயிலின் கருவறையிலிருந்த 50 கிலோ ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அரை கிலோ வெள்ளி கிரீடம், 15 கிலோ பித்தளை திருவாட்சி ஆகியவை திருடுபோனது இன்று காலை தெரியவந்தது. திருடு போன பொருள்களின் மதிப்பில் இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.